கனடா ஒன்ராறியோ தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி அதிக ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது!
Friday, June 13, 2014
/
No Comments
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் அங்குள்ள இரு பிரதான கட்சிகளின் சார்பில் மூன்று தொகுதிகளில் மூன்று ஈழத் தமிழ் வம்சாவளியினர் போட்டியிட்ட போதிலும் அவர்களில் எவருக்கும் வெற்றி வாய்ப்புக் கிட்டவில்லை.பிரதான கட்சிகளில் ஒன்றான ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் ஸ்காபுறோ - றோக் றிவர் தொகுதியில் நீதன் சண் போட்டியிட்டார்.
ஒன்ரோறியோ முன்னேற்ற கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் ஸ்காபுறோ - கில்ட்வூட் தொகுதியில் கென் கிருபா, மார்க்கம் - யூனியன்வில்லி தொகுதியில் சண் தயாபரன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
இந்த தேர்தலில், மீண்டும் லிபரல் கட்சி அதிக ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள 107 தொகுதிகளில் 58 தொகுதிகளை லிபரல்கட்சியும், 28 தொகுதிகளை முன்னேற்றகர கன்சவேட்டிவ் கட்சியும், 21 தொகுதிகளை புதிய ஜனநாயகக் கட்சியும் தக்க வைத்துள்ளன.இதன் பிரகாரம் அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 54 ஆசனங்களை விட மேலதிகமாக 4 ஆசனங்களைப் பெற்று லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது.
அநேகமான தருணங்களில் கருத்துக் கணிப்பின் பிரகாரமே ஆட்சியமையும் என்பதும் இம்முறைய கருத்துக் கணிப்பினைப் புறந்தள்ளி லிபரல் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.







