நீரில் மூழ்கி 3 பிள்ளைகளின் தந்தை பலி
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட விநாயகபுரம் மரணகண்டி ஆற்றில் முழ்கி 3 பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
விநாயகபுரம் 3, கப்பூகணார் வீதியைச் சேர்ந்த சபாரெத்தினம் வில்சன்சேகர் (வயது 50) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மேற்படி நபர் விடுமுறை தினமான வியாழக்கிழமை(13) பொழுதுபோக்கிற்காக தூண்டில் மூலம் மீன் பிடிப்பதற்கு ஆற்றிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இரவு 7 மணியாகியும் வீடு திரும்பாதிருந்ததால் உறவினர்கள் இவரை தேடிச் சென்றபோது இவர் நீரிழ் முழ்கி மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து திருக்கோவில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபாகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


























No Comment to " நீரில் மூழ்கி 3 பிள்ளைகளின் தந்தை பலி "