அரியாலையில் வித்தியாசமான திருடன் - இறந்த பெண் பிணத்தையும் விட்டு வைக்கவில்லை
யாழ் அரியாலை தபாற்கட்டைச் சந்திப் பகுதியில் இறந்த வீடு ஒன்றில் நடந்த வித்தியாசமான திருட்டில் ஐந்து பவுண் தங்கச் சங்கிலி களவாடப்பட்டுள்ளது.
ஓரிரு தினங்களுக்கு முன்னர் அரியாலை தபாற்கட்டைச் சந்திப் பகுதியில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். பெண் மரணமடைந்தவுடன் பெண்ணின் கழுத்தில் ஐந்து பவுண் தங்கச் சங்கிலியைப் போட்டு சடலத்தை எடுக்கும் வரை கிரிகைகளுக்காக வைத்திருந்துள்ளனர்.
அடுத்த நாள் சடலம் எடுப்பதற்காக இரவு சடலத்தின் அருகில் உறவினர்கள் இருந்துள்ளனர். இந் நேரம் உறவினர்கள் நித்திரையில் இருந்த சமயத்தில் நள்ளிரவில் மரண வீட்டில் புகுந்த திருடன் இறந்த பெண்ணின் சடலத்தில் இருந்த 5 பவுண் சங்கிலியைக் களவாடிச் சென்றுள்ளான். காலையில் பெண்ணின் சடலத்தைப் பார்த்த போது சங்கிலி களவாடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இறந்த வீடு பெரும் பரபரப்புக்குள்ளாகியதாகத் தெரியவருகின்றது.


























No Comment to " அரியாலையில் வித்தியாசமான திருடன் - இறந்த பெண் பிணத்தையும் விட்டு வைக்கவில்லை "