யாழ் நகரப்பகுதியில் இரவில் சுற்றித்திரிந்த சில காவாலிகள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் !

யாழ். நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும் 9 பேர் வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.நேற்று முன் தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும் 25 இற்கும் மேற்பட்டவர்கள் பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, உரிய அடையாளங்களை நிரூபிக்கத் தவறியவர்களும் இரவில் நடமாடியமைக்கான நியாயமான காரணத்தை தெரிவிக்காதவர்களுமாக 9 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மிகுதிப் பேர் விடுவிக்கப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக ரவுடிகள் உருவாகி வருகிறார்கள். ஆவா குழு , பாம்பு குரூப் என்று புதிது புதிதாக பல குழுக்கள் நாளுக்கு நாள் முளைவிட்டு வருகிறது.

























No Comment to " யாழ் நகரப்பகுதியில் இரவில் சுற்றித்திரிந்த சில காவாலிகள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் ! "