தனது கள்ளக் காதலை ஏற்க மறுத்த 40 வயது ஆசிரியை சுட்டுக் கொன்ற இளைஞன்
காதலை ஏற்க மறுத்த முன்பள்ளி ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவமொன்று பிபிலைப் பகுதியின் மெதஹின்ன என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
மெதஹின்ன என்ற இடத்தைச் சேர்ந்த அத்தநாயக்க முதியன்சலாகே ஜயலதா என்ற 40 வயது நிரம்பிய குடும்பப்பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவராவார்.
இப்பெண் தனது மகளுடன் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த வேளை, வீட்டு யன்னல் வழியாக வந்த நபர் குறிப்பிட்ட முன்பள்ளி ஆசிரியையை துப்பாக்கியினால் சுட்டுவிட்டு தப்பிப் யோடியுள்ளார்.
இக்கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கொலையுண்ட முன்பள்ளி ஆசிரியையுடன் கள்ளக்காதலை மேற்கொள்ள அக்கிராமத்தின் இளைஞர் ஒருவர் முயற்சித்துள்ளதாகவும் அவ் இளைஞனால் முன்வைக்கப்பட்ட காதல் கோரிக்கையை குறிப்பிட்ட ஆசிரியை நிராகரித்ததாகவும் இதனால் ஆத்திரம் கொண்ட குறித்த இளைஞன் ஆசிரியையை சுட்டுக் கொலை செய்து விட்டு தம்பியோடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


























No Comment to " தனது கள்ளக் காதலை ஏற்க மறுத்த 40 வயது ஆசிரியை சுட்டுக் கொன்ற இளைஞன் "