உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி சர்வதேச விமான நிலையம் தெரிவு
புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.சேவை தரம் அடிப்படையில், வருடத்திற்கு 25முதல் 40 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் விமான நிலையங்களின் மத்தியில் இது தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த சேவை தரம் புள்ளியில் 5 க்கு 4.84 புள்ளிகளை புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளது.
தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில், மொத்தம் 174 நாடுகளில் உள்ள 1751 விமான நிலையங்களில் நடந்த ஆய்வின் முடிவில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும், இந்த விருதினை டெல்லி விமான நிலையம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பெறுவது குறிப்பிடத்தக்கது.


























No Comment to " உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி சர்வதேச விமான நிலையம் தெரிவு "