இலங்கை மீதான விசாரணைகள் ஆரம்பமாகும் நிலையில், டலஸ், பான்கீ மூன் சந்திப்பு. உள்நோக்கம் என்ன?
சிறிலங்காவின் இளைஞர் விவகார அமைச்சர், திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும, கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.இந்தச் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா தலைமையகம், இதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.அதேவேளை, சிறிலங்கா அரசாங்கமும் இந்தச் சந்திப்புக் குறித்த காரணத்தையோ, அதுபற்றிய எந்த விபரங்களையோ வெளியிடவில்லை. சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணைக் குழுவை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடவுள்ள சந்தர்ப்பத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு நிருபர்.


























No Comment to " இலங்கை மீதான விசாரணைகள் ஆரம்பமாகும் நிலையில், டலஸ், பான்கீ மூன் சந்திப்பு. உள்நோக்கம் என்ன? "