சார்க் நாடுகளின் தலைவர்களுடனான ஒத்துழைப்பு தொடர்ந்து பேணப்படும் ; இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
சார்க் நாடுகளின் தலைவர்களுடனான ஒத்துழைப்பு தொடர்ந்து பேணப்படும் ; இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
சார்க் நாடுகளின் தலைவர்களுடனான ஒத்துழைப்பு தொடர்ந்து பேணப்படும் என்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அத்துடன், தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்த கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கூடுதல் ஒத்துழைப்பு பேணப்படும். அழைப்புவிடுத்த குறுகிய காலத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு வந்த சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவை தொடர விரும்பும் அதே நேரத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை சகித்துக்கொள்ள முடியாது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
அத்துடன் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் எனவும் வறுமையை ஒழிக்க புதிய அரசு பாடுபடும் எனவும் கூறியதோடு நதி நீர் இணைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1
கருத்துகள்


























No Comment to " சார்க் நாடுகளின் தலைவர்களுடனான ஒத்துழைப்பு தொடர்ந்து பேணப்படும் ; இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி "