மொனராகலையில் வர்த்தகர் சுட்டுக் கொலை
மொனராகலையில் வர்த்தகர் சுட்டுக் கொலைமொனராகலையில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பிரசவத்தை அடுத்து உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ள மனைவியை பார்ப்பதற்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பிய போது குறித்த வர்த்தகர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்றிரவு 9.30 மணியாளவில் வர்த்தகர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


























No Comment to " மொனராகலையில் வர்த்தகர் சுட்டுக் கொலை "