அனுராதபுரம் வான்படைத் தளத் தாக்குதலில் பங்கெடுத்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

அனுராதபுரம் வான்படைத் தளம் மீதான தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வான்படையைச் சேர்ந்தவர், எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமா சுவர்ணாதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராசவல்லன் தபோரூபன் என்ற இந்த சந்தேக நபர் கடந்த 2007 ஆம் ஆண்டு அநுராதபுரம் வான்படை முகாம் மீது தரை மற்றும் வான் தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் விமானப்படையின் 10 வானுர்திகள் முற்றாக சேதடைந்ததுடன் 6 வானுர்திகள் பகுதியளவில் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

























No Comment to " அனுராதபுரம் வான்படைத் தளத் தாக்குதலில் பங்கெடுத்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு! "