தேயிலை தோட்டத்தில் குப்பைகளைக் கொட்டுவதை எதிர்த்து ஹற்றன் மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியை மறைத்து மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
ஹட்டன் டிக்கோயா நகர சபை குப்பைகளை ஹட்டன் வில்பிரட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கொட்டுவதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிலாளிகளும் அட்டன் வில்பிரட்புர கிராம மக்களும் அட்டன் மல்லியப்பு சந்தியில் அட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறைத்த இன்று மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பல வருடங்களாக ஹட்டன் டிக்கோயா நகரசபை குடாஒயா பகுதியில் குப்பைகளை கொட்டியதால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனால் ஹட்டன் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து அட்டன் நீதிமன்றத்தில் முறைபாடு செய்துயிருந்தனர்.
அந்தவகையில் கடந்த மாதம் ஹட்டன் நீதிமன்றத்தின் நீதிபதி அமில ஆரியசேன குடாஒயா பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
குப்பைகளை கொட்டுவதற்கு வேறு ஒரு இடம் எடுப்பதற்கு 1 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு மேற்படி திகதி 09.06.2014 அன்றுடன் முடிவடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.
இதனால் தற்போது சேகரிக்கப்படும் குப்பைகளை ஹட்டன் வில்பிரட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கொட்டுவதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் இன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் அழகமுத்து நந்தகுமாரிடம் இது தொடர்பாக வினாவியபோது, இப்பிரச்சினை தொடர்பாக ஹட்டன் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை குப்பைகளை தங்களது பிரதேசத்தில் சேர்த்து வைக்குமாறு அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் தெரிவித்தார்.


























No Comment to " தேயிலை தோட்டத்தில் குப்பைகளைக் கொட்டுவதை எதிர்த்து ஹற்றன் மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) "