யாழில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சிரமதான பிரசாரங்கள் !
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சிரமதான பிரச்சாரம் ஒன்று இலங்கை பாதுகாப்புப் படையினரால் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்களை அகற்றி சுழலுடன் சிறந்த ஒரு உறவினை பேணும் நோக்கிலேயே இப் பிரச்சாரத்திட்டம் கடந்த சனிக்கிழமை (07) மேற்கொள்ளப்பட்டது என யாழ் படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வேலைத்திட்டத்தின் போது படையினர் அனைத்து பிரதேசங்களிற்கும் சென்று சூழலில் வீசப்பட்ட மற்றும் வீடுகளில் உள்ள அங்குள்ள கழிவுப் பொருட்களை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட பொலித்தீன், பிளாஸ்டிக், மற்றும் வெறும் கொள்கலன்கள் ஓரிடத்தில் வைத்து அழிக்கப்பட்டன.
இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வில் ஏராளமான பாடசாலை மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் இடையில் சிறந்த விளிப்புனர்வை ஏற்படுத்தி இருந்தனர்..............


























No Comment to " யாழில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சிரமதான பிரசாரங்கள் ! "