வியட்நாம் பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
வியட்நாம் பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் கண்டறியும் நோக்குடன் வியட்நாம் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இவர்கள் காலை 9மணிக்கு பலாலியை வந்தடைவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி குறித்த குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் , வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இன்று விஜயம் மேற்கொள்ளும் குழுவினர் 3நாட்களுக்கு தங்கியிருப்பார்கள் என்றும் குறித்த காலப்பகுதியில் அதிகாரிகள் பலரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன.

























No Comment to " வியட்நாம் பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் "