சாட்சியமளித்த யாரும் தமக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார் செய்யவில்லை; ஆணைக் குழுவின் செயலர் குணதாச
சாட்சியமளித்த யாரும் தமக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார் செய்யவில்லை; ஆணைக் குழுவின் செயலர் குணதாசகாணாமல் போனவர்கள் குறித்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த யாரும் தமக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக இதுவரை புகார் செய்யவில்லை என ஆணைக் குழுவின் செயலர் குணதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் இல்லாத நிலையில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி அளிப்பவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினாலும் அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்பட்டும் வருகின்றன.
இதுவரை சாட்சிகள் எவரும் தங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்றும், யாரேனும் பகிரங்கமாக சாட்சி அளிக்கத் தயங்கினால் இரகசியமாக சாட்சி அளிக்க வசதிகள் செய்யப்படும், அது ஒரு போதும் வெளிவராது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆணைக்குழுவின் 2 வது அமர்வு நேற்று காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்று முடிந்தது. காத்தான்குடி பிரதேசத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் முஸ்லிம்கள் தொடர்பில் இரு நாட்களில் 110 பேர் ஆணைக்குழு முன்னர் சாட்சியளித்தார்கள். விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே கூடுதலானவர்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக 1990 ஜுலை 12 ஆம் திகதி குருக்கள்மடம் என்னுமிடத்தில் சடலமாக புதைக்கப்பட்ட 167 முஸ்லிம்கள் தொடர்பாகவே அநேகமானோர் சாட்சி அளித்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

























No Comment to " சாட்சியமளித்த யாரும் தமக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார் செய்யவில்லை; ஆணைக் குழுவின் செயலர் குணதாச "