By
kesa -
Thursday, June 12, 2014
-
No Comments

பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களில் நாடுகடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய ஊடகம் ஒன்றின் தகவல் படி, இதற்கான ஏற்பாடுகளை தற்போது பிரித்தானிய குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரி சமர்ப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளனர்.
இதற்கிடையில், தற்கொலை சம்பவங்களை கருதி இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுவதை இடைநிறுத்தப் போவதில்லை என்று, அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி அவுஸ்திரேலியாவில் இருந்தும் எதிர்வரும் வாரங்களில் இலங்கையர்கள் சிலர் நாடுகடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ள இலங்கை அகதிகளுக்கான முன்னறிவித்தலை, அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் திணைக்களம் வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share This:
Jillur Rahman
I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.
No Comment to " புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை திருப்பி அனுப்ப பிரித்தானியாவும், அவுஸ்ரேலியாவும் நடவடிக்கை! "