வேலணையில் பொதுச் சந்தைக்கு அடிக்கல் நாட்டு விழா! (படங்கள்)
உலக வங்டகியின் நிதி உதவியுடன் நெல்சிப் - புறநெகுமத் திட்டத்தின் கீழ் வேலணை பிரதேச சபையால் 14 மில்லியன் ரூபாவில் நிர்மானிக்கப்படவுள்ள வேலணை பொதுச்சந்தைக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சின்னையா சிவராசா அவர்களின் தலைமையில் நேற்று 11.06.2014 புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் அவர்கள் அடிக்கல்நாட்டி ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன், தீவகம் தெற்கு பிரதேச செயலக செயலர் திருமதி மஞ்சுளா சதீசன், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸரைன்ரன் ஜக்சீல், தீவகம் தெற்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மீரா, வேலணை பிரதேச சபை உப தவிசாளர் திரு கார்த்திகேசன், வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் திரு ப. தவபாலன், திரு சி.ரவின்சன், திரு ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோருடன் கிராம சேவையாளர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்களும், பொதுமக்களின் பிரதிநிதிகளும் அத்தோடு வேலணை பிரதேச சபை செயலாளர் திரு. மு. இரஜகோபால் மற்றும் வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.





























No Comment to " வேலணையில் பொதுச் சந்தைக்கு அடிக்கல் நாட்டு விழா! (படங்கள்) "