தனியார் மினி பஸ் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
தனியார் மினி பஸ் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்யாழ். மல்லாகத்தில் ஒழுங்கையொன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் மினி பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாதோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், பஸ்ஸின் முன்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் வழித்தட சேவையில் ஈடுபடும் மேற்படி மினி பஸ்ஸின் மீதே கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தனிப்பட்ட பிரச்சினையே இக்கல்வீச்சுக்கு காரணமென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


























No Comment to " தனியார் மினி பஸ் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் "