கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நாளாந்தம் 240 மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை; அதிபர்
கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நாளாந்தம் 240 மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை; அதிபர்மட்டக்களப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நாளாந்தம் 240 மாணவர்கள் காலை உணவு உட்கொள்ளாமல் வருவதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் கரடியனாறு விஜயத்தின்போதே, அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு இணங்க கரடியனாறுமகா வித்தியாலய பாடசாலை மைதானத்தை புனரமைப்பதற்காக ஜனாதிபதி ஆலோசகரினால் நிதி ஒதுக்கீடு வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் மக்களுடனான சந்திப்பின்போது இவரிம் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக தாம் தற்காலிக கூடாரங்களிலேயே தங்கியிருப்பதாக மக்கள் இதன்போது சந்திரகாந்தனிடம் குறிப்பிட்டனர்.
மேலும் அக்கிராமத்திற்கு மின்சாரம், வீதிகள், தபால் நிலைய கட்டிடம், போன்ற கோரிக்கைகளும் இதன்போது இவரிடம் முன்வைக்கப்பட்டன.


























No Comment to " கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நாளாந்தம் 240 மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை; அதிபர் "