மட்டக்களப்பில் யானை தாக்கி விவசாயி பலி
மட்டக்களப்பில் யானை தாக்கி விவசாயி பலிமட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லடி வெட்டை வயல் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மாவடிவேம்பு சித்தாண்டியைச் சேர்ந்த மு.சீனித்தம்பி வயது (வயது 57) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவ தினம் அன்று அதிகாலை வேளை காலைக் கடன் முடிப்பதற்காக அருகில் உள்ள காட்டிற்கு சென்றவர் திரும்ப வயல் வாடிக்கு வந்து சேராததினால் உறவினர் சென்று தேடியபோது யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது சடலத்தினை இன்று குறித்த பிரதேசத்தில் இருந்து கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

























No Comment to " மட்டக்களப்பில் யானை தாக்கி விவசாயி பலி "