நவி. பிள்ளைக்கு அடுத்து மனித உரிமைகள் ஆணையாளராகின்றார் ஜோர்தான் இளவரசர்!
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் முடிந்தவுடன் ஐ.நாவுக்கான ஜோர்தான் தூதுவரான இளவரசர் ஸெய்ட் ரா அத் ஸெய்ட் அல் ஹுஸைனை தான் நியமிக்கவுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டு இறுதியுடன் முடிவடையவிருந்தது. எனினும் மேலும் இரு வருடங்களுக்கு அவரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நவீபிள்ளைக்குப் பின் ஐநா. மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் தூதுவரான இளவரசர் ஸெய்ட் ரா அத் ஸெய்ட் அல் ஹுஸைனை பான் கீ மூன் முன்மொழிந்துள்ளார்.
நீண்டகாலமாக ராஜதந்திரியாக பணியாற்றி வரும் இளவரசர் ஸெய்ட் அல் ஹுஸைனை இப்பதவிக்கு பான் கீ மூன் முன்மொழிந்துள்ளார் என பான் கீ மூனன் அலுவலகம் தெரிவித்துள்ளது.


























No Comment to " நவி. பிள்ளைக்கு அடுத்து மனித உரிமைகள் ஆணையாளராகின்றார் ஜோர்தான் இளவரசர்! "