விசாரணைக் குழுவை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் –

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அமைக்கும் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவ, மெதிரிகிரியவில் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியுடன் கட்டியெழுப்பி வருகையில், ஜெனிவாவில் எமக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நாம் போர்க்குற்றம் செய்ததாகக் கூறி குப்பைகளை தோண்ட சிலர் முயற்சிக்கின்றனர்.
இது பற்றிய தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை நாடாளுமன்றத்துக்கு வழங்க உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, விரிவான விசாரணைகளை நடத்துவதற்கான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று அறிவித்ததை அடுத்தே, சிறிலங்கா அதிபரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது

























No Comment to " விசாரணைக் குழுவை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் – "