விடுதலை செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு (படங்கள் இணைப்பு)
விடுதலை செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு (படங்கள் இணைப்பு)
மன்னார் மாவட்ட நீதிமன்றினால் நேற்று விடுதலை செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்களும் இன்று தலைமன்னார் கடற்படை தளத்திலிருந்து தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இவர்களைக் கடந்த 9 ஆம் திகதி மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியபோது, அனைவரையும் இந்த மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கைதான மீனவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி பணித்திருந்தார். இதனையடுத்து யாழ்ப்பாணம்,மன்னார் ஆகிய இடங்களில் கைதான மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மன்னார் நீதிமன்று ஊடாக விடுதலையான 46 பேரையும் இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதரக அதிகாரி, இன்று வியாழக்கிழமை காலை தலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தார்.
இவர்கள் அனைவரையும் தலைமன்னார் கடற்படைத்தளத்திலிருந்து இரு வேறு படகுகளில் கடற்படையினர் காலை 9.30 மணியளவில் அழைத்துச் சென்றனர்.




























No Comment to " விடுதலை செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு (படங்கள் இணைப்பு) "