இலங்கையில் கொல்லப்பட்ட 19 வயது அழகி! நடந்தது என்ன ?
2005ம் ஆண்டு சுவீடன் நாட்டு இளம்பெண் ஒருவர் கொழும்பில் வைத்து கொலை செய்யப்பட்டர். இக்கொலையுடன் தொடர்புடைய சிங்கள இளைஞரைப் பொலிசார் உடனே கைது செய்துவிட்டார்கள். குற்றவாளியும் குற்றத்தை ஒப்புக் கொள்ள அவருக்கு 12 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இச்சிறைத் தண்டனை அதி கூடியதாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்று அவர் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
ஆனால் மேன் முறையீட்டை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு மரண தண்டனையை வழங்கியுள்ள விபரரீதம் இடம் பெற்றுள்ளது. தண்டனைக் கலாத்தை குறைக்கப்போய், அது உயிருக்கே உலையாக மாறியதை இங்கு தான் பார்க முடியும். மாடல் அழகியாக சில நிறுவனங்களில் இருந்த ஜெவ்னி ஜோன்ஸ்சனுக்கு அப்போது 19 வயது தான். கொழும்பில் பிரபலமான மற்றும் ஆடம்பரமான ஒரு தொடர்மாடி குடியிருப்பில் அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவரது தாயார் ஒரு இலங்கையர் மற்றும் தகப்பன் ஒரு சுவீடன் நாட்டவர். ஜென்வி ஜோன்ஸ்சன் டிசைன் தொழிலை கற்றுக் கொள்ளவே இலங்கை வந்திருந்தார்.
அவரது இளைய சகோதரிக்கு(17) ஒரு சிங்கள இளைஞர் காதலனாக இருந்துள்ளார். சம்பவ தினத்தன்று தனது தங்கையின் காதலனுடன் ஜெவ்னி களியாட்ட விடுதிக்குச் சென்றுள்ளார். கடும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியிருந்த இந்த சிங்கள இளைஞனுடன் அவர் பின்னர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அன்றைய தினம் இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த இளைஞர் ஜெவ்னியை மாடிப் படியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். முகம் குப்பறமாக விழுந்து அடிபட்ட அவரை, தனது ஜீன்ஸை களற்றி கழுத்தில் போட்டு இறுக்கியுள்ளார். தலையில் அடிபட்டு ரத்தக் கசிவு காரணமாக ஜெவ்னி துடிதுடித்து இறந்துபோனார். குறித்த இளைஞர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். யூட் ஜெயமகா என்னும் இச் சிங்கள இளைஞனை பின்னர் பொலிசார் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள்.
யூட் ஜெயமகாவின் பெற்றோர்கள் பெரும் செல்வந்தர்கள். அவர்கள் இந்த வழக்கை திசைதிருப்ப கடும் முயற்சியில் ஈடுபட்டார்கள். யூட் வேண்டும் என்றே இக்கொலையை செய்யவில்லை என்றும், தற்செயலாக அவர் தள்ளிவிட்ட இடத்தில் அப்பெண் கீழே விழுந்து மரணித்தார் என்றும் வக்கீல் கடுமையாக வாதாடினார். இதன் காரணமாக யூட்ஜெயமகாவுக்கு வெறும் 12 வருட சிறைத்தண்டனையே வழங்கப்பட்டது. இருப்பினும் பணக்காரர்கள் சும்மா இருப்பார்களா ? திரும்பவும் இந்த வழக்கை நோண்ட ஆரம்பித்தார்கள். வழங்கப்பட்ட தண்டைக் காலம் அதிகூடியது என்றும் அதனைக் குறைக்க வேண்டும் என்றும், பெரும் பணத்தை செலவழித்து வாதாடினார்கள்.
ஆனால் இந்த யூட் ஜெயமகா தனது ஜீன்ஸை களற்றி அப்பெண்ணின் கழுத்தை சுற்றி இறுக்கினார் என்ற விடையத்தை, கோடிட்டுக் காட்டி பொலிசார் இம்முறை(புது அறிக்கை) ஒன்றை சமர்பித்துள்ளார்கள். அங்கே தான் வசமாக மாட்டிக்கொண்டார் இந்த யூட் ஜெயமகா. நேற்று நடந்து முடிந்த இந்த மேன் முறையீட்டு வழக்கில், இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இனி என்ன வழமைபோல இதனை எதிர்த்தும் உச்ச நீதிமன்றம் வரை செல்வார்கள்.
ஒரு இளம் பெண்ணின் வாழ்வு இலங்கையில் முடிவுற்றுள்ளது. நடந்து முடிந்த இக்கொடுமையை தாங்க முடியாமல் அவர்கள் பெற்றோர்கள் எஞ்சியுள்ள தமது இளைய மகளை அழைத்துகொண்டு மீண்டும் சுவீடன் சென்றுவிட்டார்கள். போதைப் பொருளுக்கு அடிமையாகி இள வயதிலேயே மரணதண்டனையை எதிர்நோக்கிக்கொண்டு இருக்கும் இந்த இளைஞன் கதையும் சில வருடங்களில் முடிந்துவிடும்.


























No Comment to " இலங்கையில் கொல்லப்பட்ட 19 வயது அழகி! நடந்தது என்ன ? "