யாழ். திறந்தவெளி அரங்கப் பகுதியில் இந்திய உதவியுடன் கலாசார மண்டபம் 120 கோடி ரூபா செலவில் அமையும்
யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அருகில் உள்ள - முன்னர் திறந்தவெளி அரங்கு இருந்த பிரதேசத்தில் - இந்திய அரசு 120 கோடி ரூபா செலவில் கலாசார மண்டபம் ஒன்றை அமைக்கவிருக்கின்றது.கொழும்பில் இது தொடர்பான உடன்படிக்கை ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சின் செயலாளர் நிஹால் ஜெயதிலகவும், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவும் ஒப்பமிட்டனர். இந்திய கலாசார மண்டபத்துக்கான நிலத்தை யாழ். மாநகரசபை வழங்கி உதவுகின்றது.
அடுத்த மூன்று வருட காலப்பகுதிக்குள் இந்தக் கட்டமைப்பு வேலைகள் பூர்த்தியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேசமயம், அருகில் உள்ள புல்லுக்குளமும் மிதக்கும் மேடை கொண்ட பண்பாட்டு இணைவு மையமாக விருத்தி செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
புதிய கலாசார மண்டபம்; உள்நாட்டு மற்றும் சர்வதேச கலாசார நிகழ்வுகளை நடத்தக்கூடிய மையமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. திரையரங்கை ஒத்ததாக அமையும் கலாசார மண்டபம் 600 இருக்கைகளைக் கொண்டிருக்கும். 'புரொஜெக்டர்' வசதியும் பொருத்தப்பட்டிருக்கும்.


























No Comment to " யாழ். திறந்தவெளி அரங்கப் பகுதியில் இந்திய உதவியுடன் கலாசார மண்டபம் 120 கோடி ரூபா செலவில் அமையும் "