சீனா: லாரி தீப்பிடித்து எரிந்ததால் 10,000 கோழிகள் உயிரோடு கருகி பலி. மகிழ்ச்சியில் கிராம மக்கள்.
koliசீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால், லாரியில் இருந்த 10,000க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் எரிந்து பலியாகின. இதைக்கேள்விப்பட்ட அருகிலுள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தீயில் எரிந்த கோழிகளை சந்தோஷத்துடன் எடுத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவில் உள்ள Suizhou, Hubei province என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சுமார் 10,000க்கும் மேற்பட்ட கோழிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. கோழிகள் அனைத்தும் சிறுசிறு கூண்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. லாரியை Yuan என்பவர் ஓட்டிக்கொண்டு சென்றார்.
லாரி சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே லாரியை நிறுத்திவிட்டு, கோழிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார். சில நூறு கோழிகளை அவர் காப்பாற்றிக் கொண்டிருக்கும்போதே லாரி முழுவதும் தீ மளமளவென பிடித்துவிட்டதால் ஆயிரக்கணக்கான கோழிகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் தீயணைப்புப்படையினர் வந்து தீயைக்கட்டுப்படுத்தினர்.
லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது. கோழி ஏற்றிவந்த லாரி தீப்பிடித்த தகவல் கிடைத்ததும் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் உடனே திரண்டனர். எரிந்து கருகிப்போய் ரோஸ்ட் போல இருந்த சிக்கனை ஆளாளுக்கு அள்ளி சென்றதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அந்த கிராம மக்கள் எல்லோருடைய வீட்டிலும் சிக்கன் தான் சாப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.


























No Comment to " சீனா: லாரி தீப்பிடித்து எரிந்ததால் 10,000 கோழிகள் உயிரோடு கருகி பலி. மகிழ்ச்சியில் கிராம மக்கள். "