கல்வியங்காடு ஆனந்தபுரப் பகுதி சீர் அற்ற வீதியால் மக்கள் சிரமம்!
[தங்கராசா ஷாமிலன்]புதிய செம்மணி வீதியில் ஆனந்தபுரம் பகுதியில் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர். கட்டப்பிராய் பகுதியின் ஊடாகவும் இவர்களது இடத்திற்கும் பாதை செல்கின்றது. ஆனால் சில பகுதி வரையே பாதை போடப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் பாதை போடாது மிகவும் கேவலமான நிலையில் காணப்படுகிறது.
இந்தப் பாதையால் ஆனந்தபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் விவசாயிகள் போன்றோர் மிகவும் சிரமப்பட்டே செல்கின்றார்கள். ஆனால் இவற்றைப் பொருட்படுத்தாது உரிய அதிகாரிகளும் செயற்படுகின்றனர். தேர்தல் வந்தால் வாக்குச் சேகரிக்க மட்டுமே எல்லா அரசியல்வாதிகளும் தமது பகுதிக்கு வந்து செல்வதாகவும் சில பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உரிய அதிகாரி அவர்களே உங்கள் கவனத்திற்கு.............


























No Comment to " கல்வியங்காடு ஆனந்தபுரப் பகுதி சீர் அற்ற வீதியால் மக்கள் சிரமம்! "