கொடிகாமத்தில் ஏ.கேயுடன் இளைஞன் கைது!

தென்மராட்சியின் கொடிகாமம் கெற்பேலிப்பகுதி வீடொன்றினுள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாக இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார். அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து படையினரின் உதவியுடன் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த 22 வயதுடைய குறித்த இளைஞரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த இளைஞனிற்கு எவ்வாறு ஆயுதங்கள் கிடைத்தன என்பது தொடர்பாக விசாரணை செய்ய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவருகிறது. யாழ்.மாவட்ட படைத்தலைமையுடன் தொடர்புகளை கொண்ட அரச ஆதரவு பிரமுகரது தொண்டர் ஒருவரது வீட்டிலிருந்தே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது

























No Comment to " கொடிகாமத்தில் ஏ.கேயுடன் இளைஞன் கைது! "