தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 46 பேர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 46 பேர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்புஇலங்கை கடல் எல்லையினுள் அத்துமீறி நுழைந்து 10 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 51 மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 9 படகுகளைச் சேர்ந்த 46 மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் பி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.
தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 10 படகுகளில் வருகை தந்த 51 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த 51 இந்திய மீனவர்களில் 9 படகுகளில் கைது செய்யப்பட்ட 46 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.41 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் பி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.
மேலும் ஒரு படகில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த படகின் இயந்திரம் செயலிழந்த நிலையில் இவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில் குறித்த மீனவர்களை கடற்படையினர் இந்திய கடலோரக்காவல் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
-தற்போது மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 46 மீனவர்களிடம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட பின் திணைக்கள அதிகாரிகளினால் மன்னார் நீதிமன்றத்தில் குறித்த 46 மீனவர்கள் ஆஜர் படுத்தப்படவுள்ளதோடு அவர்களின் படகுகளில் இருந்த வலைத்தொகுதிகளும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் பி.எஸ்.மெராண்டா மேலும் தெரிவித்தார்

























No Comment to " தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 46 பேர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு "