தர்மபுரி அருகே இடம் பெற்ற விபத்தில் சேலத்தை சேர்ந்த 3 பேர் பலி
தர்மபுரி அருகே இடம் பெற்ற விபத்தில் சேலத்தை சேர்ந்த 3 பேர் பலிதர்மபுரி அருகே இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் சேலத்தை சேர்ந்த 3 பேர் ணயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடாபில் மேலும் தெரியவருவதாவது,
சேலம் கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சிலர் 3 கார்களில் பெங்களூருக்கு ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு சென்று ஊர் திரும்பி கொண்டிருந்த நிலையில் காரை முகமது ரபிக் என்பவரது மகன் இம்ரான் (வயது 20) என்பவர் ஓட்டி வந்தார். இதில் பழைய இரும்பு வியாபாரி அக்ரோஷ்பாஷா (வயது 40). இவரது மனைவி வகீத்பானு (வயது 33) மற்றும் நாசர் பாஷா என்பவரது மகன் சுபேர்பாஷா (வயத 13), அக்பர் (வயது 15), நாசர்பாஷா (வயது 38), ஷபீர்பாஷா, ஷமிளா பாஷா, அஸ்ரத் பாஷா ஆகிய 9 பேர் இருந்தனர்.
கார் இன்று அதிகாலை தர்மபுரி அருகே உள்ள சவுளூர் மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அதிகாலை நேரம் என்பதால் காரில் இருந்தவர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் கார் முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி வந்த டிரைவர் இம்ரான், மற்றும் அக்ரோஷ்பாஷா ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி பலியாகினர் ஏனையோர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரி அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுபேர்பாஷா என்பவரும் உயிரிழநதார். ஏனைய 6 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருவதுடன் மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் விபத்தில் பலியான மூவரின் உடல்களையும் பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த விபத்து சம்பவததால் அப்பகுதியில் பகுதியில் அதிகாலை நேரத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

























No Comment to " தர்மபுரி அருகே இடம் பெற்ற விபத்தில் சேலத்தை சேர்ந்த 3 பேர் பலி "